புவனேஷ்வரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா - கவுகாத்தி அணிகள் மோதின. முதல் பாதியின் 24வது நிமிடத்தில் கவுகாத்தி வீரர் மார்டின் சாவ்ஸ் கோல் அடித்து அணியை முன்னிலை படுத்தினார். இரண்டாம் பாதியில் ஆக்ரோஷம் காட்டிய ஒடிசா அணி இரண்டு கோல் அடித்தது. இறுதியில் ஒடிசா அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தியது.