விளையாட்டு

சிஎஸ்கேவில் இணைகிறாரா ஹர்திக் பாண்டியா? சி.எஸ்.கே வீடியோவில் குறியீடா?

சிஎஸ்கேவில் இணைகிறாரா ஹர்திக் பாண்டியா? சி.எஸ்.கே வீடியோவில் குறியீடா?

thanthitv

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறுகிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், சிஎஸ்கே வெளியிட்டுள்ள குறியீடுகள் நிறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் வீரர்களை அணிகள் மாற்றிக்கொள்ளும் TRADE குறித்த பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், பிரபல வானிலை ஆர்வலர் பிரதீப் ஜானும், சிஎஸ்கேவின் அடையாளச் சின்னமான லியோவும் இணைந்து வானிலை அறிக்கை வாசிப்பதைப் போன்ற வீடியோவை சென்னை அணி வெளியிட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள அரபிக்கடல், எல் கிளாசிக்கோ, HP உள்ளிட்ட குறியீடுகள் ஹர்திக் பாண்டியாவைக் குறிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனால் ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு மாறப்போகிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இருப்பினும், வீரர் மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

#CSK #HardikPandya #Trade #Thanthitv

TNPSC | Group 4 Exam | குரூப் 4 தேர்வு.. முக்கிய மாற்றம்.. அவசியம் நோட் பண்ணுங்க..!

Dindigul | TN Police | அரசியல் புள்ளி கொடூரமாக வெட்* கொ*ல.. பதற்றத்தில் திண்டுக்கல்

Gingee Girl Missing | "நாமக்கல்லில் செஞ்சி சிறுமி.." சமையலர் பரபரப்பு தகவல்

NeoMax Scam | ED | நியோமேக்ஸ் மோசடி - ரூ.238 கோடி சொத்துகள் ஒப்படைப்பு

CM Vijay | TVK | "கன்னத்துல ஒரு முத்தம்" கேட்ட குடும்பத்தார் - ஷாக்காகி CM விஜய் கொடுத்த லுக்