விளையாட்டு

ஐ.பி.எல்.இறுதிப் போட்டி சென்னைக்கு வாய்ப்பு மறுப்பு : சென்னையிலிருந்து மாற்ற காரணம் என்ன?

ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நடத்தப்படாதது தமிழக ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

தந்தி டிவி
ஐ.பி.எல். தொடரில் பெரும்பாலான இறுதிப் போட்டிகள், நடப்பு சாம்பியனாக களமிறங்கும் அணியின் சொந்த ஊரிலே நடைபெறும். அதன் படி, நடப்பு சாம்பியனாக சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியதால், சென்னையிலேயே இறுதிப் போட்டி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் காரணத்தை காட்டி, பிளே ஆப் சுற்றுக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ.அ றிவிக்காமல் இருந்தது. தேர்தல் ஏற்கனவே தமிழகத்தில் நடந்து முடிந்துவிட்டதால் சென்னையில் இறுதிப் போட்டி 7 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் என்ற மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் தற்போது இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் உள்ள ஐ.ஜே.கே. ஆகிய மூன்று பார்வையாளர்கள் மாடங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதே போட்டி மாற்றப்பட்டதற்கு காரணம் என்று பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏமாற்றம் அடைந்துள்ள தமிழக ரசிகர்கள், விரைவில் இந்தப் பிரச்சனையை தீர்த்து, சென்னையில் போட்டியை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்