விளையாட்டு

ஐ.பி.எல் தொடர் : செப்.19ல் ஆரம்பம் - நவ.8ல் இறுதிப்போட்டி என அறிவிப்பு

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல், ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் வெளியிட்டுள்ளார். அதன்படி, விரைவில் போட்டி அட்டவணைகள் வெளியாகும் என்றும், நவம்பர் 8ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் இந்த தொடரானது, மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்