விளையாட்டு

அடுத்து ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம்

அடுத்து ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

முதல் வீரராக அறிவிக்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் லின்னை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.. அடுத்ததாக அறிவிக்கப்பட்ட , இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனை கொல்கத்தா நைர் ரைடர்ஸ் நிர்வாகம் 5 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. அதிரடி ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லை பஞ்சாப் அணி 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸை வாங்க டெல்லி , பெங்களூர் அணிகள் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் , கொல்கத்தா அணி அவரை 15 கோடியே 50 லட்சம் ரூபாய்க்க்கு ஏலம் எடுத்தது.

இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் குர்ரன் பேர் அறிவிக்கப்பட்ட போது சென்னை அணி கோதாவில் குதித்தது. டெல்லி அணி சாம் குர்ரனை வாங்க போட்டியிட்ட போதிலும் சென்னை அணி அவரை 5 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது..

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்