அனைத்து வயதினரையும் கவரும் வகையில் தங்களது அணியில் வீரர்கள் இடம்பெற்று இருப்பதாக சிஎஸ்கே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் டீன் ஏஜ் பருவத்தினரை கவரும் வகையில் விக்கெட் கீப்பரான கார்த்திக் சர்மா, 20 களில் உள்ளவர்களை கவரும் வகையில் விக்கெட் கீப்பரான உர்வில் பட்டேல் மற்றும் முப்பதுகளில் உள்ளவர்களை கவரும் வகையில் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் மற்றும் 40களில் உள்ளவர்களை கவரும் வகையில் விக்கெட் கீப்பரான தோனி ஆகியோர் சிஎஸ்கேவில் இடம் பெற்றிருப்பதாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது."