இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு டெல்லி கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது.சென்னை அணியில் தோனி, ரெய்னா, வாட்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். டெல்லி அணியிலும் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், பவுல்ட் உள்ளிட்ட திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். மேலும் முதல் போட்டியில் வென்ற உத்வேகத்துடன் டெல்லி அணி களமிறங்குகிறது. இதுவரை இவ்விரு அணிகளும் 18 முறை மோதியுள்ளன. இதில் சென்னை அணி 12 முறையும், டெல்லி அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன.