சிறப்பு குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி வரும் ஆகஸ்ட் 3ம் தேதி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஜப்பான், கொரியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த சிறப்பு குழந்தைகள் பங்கேற்க உள்ளனர். இது தொடர்பாக அதன் ஏற்பாட்டாளரான special Olympic அமைப்பு சார்பில் சென்னை தி.நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற நடிகை வரலட்சுமி, 51 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவில் இந்த போட்டி நடைபெறுவது பெருமைக்குரிய விஷயம் என்று தெரிவித்தார்.