விளையாட்டு

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...வெற்றிக்கு முன்னரே கொண்டாடிய இங்கிலாந்து

சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 227 ரன்கள் வித்தியாசத்தில், இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், வெற்றிக்கு முன்னரே அந்த அணி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.

தந்தி டிவி
சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 227 ரன்கள் வித்தியாசத்தில், இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், வெற்றிக்கு முன்னரே அந்த அணி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. ஆட்டத்தின் 57-ஆவது ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து இந்தியா விளையாடியபோது, இஷாந்த சர்மா பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். அப்போது, ஸ்டம்ப்பில் இருந்த பெய்ல்ஸ் கீழே விழுந்து கிடந்ததால், இங்கிலாந்து வீரர்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்து கொண்டாடத் தொடங்கினர். ஆனால், மூன்றாவது நடுவர் ரீப்ளே செய்து பார்த்தபோது, பந்துவீசுவதற்கு முன்பே அது கீழே விழுந்தது தெரியவந்தது. இதனால், அவுட் ஆகாமல் இஷாந்த் தப்பித்தபோதும், அடுத்த சில ஓவரில், பும்ராவின் விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு