விளையாட்டு

'கெத்தா.. ஸ்டெய்லா'.. இந்தியா அபார வெற்றி - 3 பார்மெட்டிலும் நம்பர் 1

தந்தி டிவி

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 50 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் டேவிட் வார்னர் அரைசதம் அடித்தார். பின்னர் 277 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 48 புள்ளி 4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், சூர்ய குமார் யாதவ், கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

TN Congress | TN Election | தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்? | சட்டென செல்வப்பெருந்தகை கொடுத்த பதில்

Breaking | Bihar CM | Nitish Kumar | முதல்வர் ராஜினாமா? | பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு

Breaking | DMK Alliance | இறுதியாகும் சீட்? | அண்ணா அறிவாலயத்தில் விறுவிறுக்கும் பேச்சுவார்த்தை

Breaking | Thiruparankundram Issue | திருப்பரங்குன்றம் விவகாரம் | கோர்ட்டில் பரபரத்த விவாதம்

Breaking | Joy Crizilda | Madhampatty Rangaraj | மாதம்பட்டிக்கு DNA டெஸ்ட்.. ஹை-கோர்ட் உத்தரவு