விளையாட்டு

India vs Pakistan | No Handshake | இந்தியாவிடம் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான் - டிரெண்டாகும் ஹேஷ்டேக்

இந்தியாவிடம் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான் - டிரெண்டாகும் ஹேஷ்டேக்

thanthitv

பாக். வீரர்களுடன் கைகுலுக்க இந்திய அணி மறுப்பு- டிரெண்டாகும் ஹேஷ்டேக் டி20 உலக கோப்பை போட்டியின் நேற்றைய ஆட்டத்திலும் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய அணி கைகொடுக்க மறுத்தது... பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பின், இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதே கேள்விக்குறியாக இருந்தது. இதற்கு மத்தியில், கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாட மறுத்தது. பின்னர், கடைசி நேரத்தில் அந்தப் போட்டி ஹைபிரிட் முறையில் துபாய்க்கு மாற்றப்பட்டது. அதிலும் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் கைகொடுக்க மறுத்தனர். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியிலும் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்தியா கைகொடுக்க மறுத்தது.. அதேசமயம், பாகிஸ்தான் வீரர்களை இந்தியா தக்க தருணத்தில் பழிவாங்கியதாக சமூக வலைதளத்தில் 'No Handshake' என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்