விளையாட்டு

பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி - பெருமையை தக்க வைத்த வீராங்கனைகள் | IndVsPak

பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி - பெருமையை தக்க வைத்த வீராங்கனைகள் | IndVsPak

தந்தி டிவி

எந்த விதமான கிரிக்கெட்டிலும் பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் மோதினால் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

அதுவும் உலகக் கோப்பை தொடர் என்றால் கேள்விக்கே அவசியம் இல்லை. ஆட்டத்தில் அனல் பறக்கும்.

இத்தகைய சூழலில் 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பையின் லீக் போட்டியில், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.

நியூசிலாந்தின் மவுன்ட் மாங்கனுயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார், இந்திய கேப்டன் மிதாலி ராஜ்...

தொடக்க வீராங்கனை ஷஃபாலி வெர்மா டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தாலும், மந்தனா - தீப்தி சர்மா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

மந்தனா 52 ரன்களுக்கும், தீப்தி 40 ரன்களுக்கும் பெவிலியன் திரும்ப, மிடில் ஓவர்களில் இந்திய அணி தடுமாறியது.

gfx in

card1

கேப்டன் மிதாலிராஜ் உள்பட மிடில் ஆர்டர் வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டி அதிர்ச்சி அளித்தனர்.

card2

என்றாலும், ஏழாவது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஸ்னே ரானா - பூஜா ஜோடி, அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தது.

card3

பூஜா 67 ரன்களும் ஸ்னே 53 ரன்களும் எடுத்த நிலையில், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 244 ரன்கள் சேர்த்தது.

gfx out

இதன்பிறகு களமிறங்கிய பாகிஸ்தான், இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டது.

gfx in

card1

பந்துவீச்சில் மிரட்டிய இந்திய வீராங்கனை ராஜேஸ்வரி, 4 விக்கெட்டுகளை சாய்த்து பாகிஸ்தானை கலங்கடித்தார்.

இதனால், பெவிலியன் நோக்கி அணிவகுப்பு நடத்தினர் பாகிஸ்தான் வீராங்கனைகள்...

card2

இறுதியாக 43வது ஓவரில் 137 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல்-அவுட் ஆன நிலையில், 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றியை ருசித்தது.

card3

இந்த வெற்றியால் மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையையும் தக்கவைத்துள்ளது இந்தியா...

gfx out

உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்தியா, வருகிற 10ம் தேதி நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி