விளையாட்டு

இந்தியா Vs நியூசிலாந்து 2-வது டி-20 போட்டி - இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் பேட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தந்தி டிவி

ஆக்லாந்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ்வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கப்டில், சீபெர்ட் ஆகியோர் தலா 33 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளை ​வீழ்த்தினார். 133 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 57 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில், இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு