விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்/5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

தந்தி டிவி

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்சில் 353 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்தியா, 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் 46 ரன்கள் முன்னிலையோடு 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோகித் சர்மாவும் - ஜெய்ஸ்வாலும் சிறப்பான துவக்கம் தந்தனர். ஆனால், அதன்பின்னர் ஜெய்ஸ்வால் 37 ரன்களுக்கும், ரோகித் சர்மா 55 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரஜத் படிதார், சர்பராஸ் கான் ஆகியோர் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கில்லும், துருவ் ஜூரலும் நிலைத்து நின்று ஆடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். கில் அரைசதமடித்த நிலையில், ஜூரல் 39 ரன்கள் எடுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்