விளையாட்டு

உலகக் கோப்பை 2019 இந்திய அணி அறிவிப்பு...

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வரும் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கும் உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கோலி தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். கேப்டன் கோலி மூன்றாவது இடத்திலும், தமிழக வீரர் விஜய் சங்கர் 4 வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

முன்னாள் கேப்டன் தோனி 5 வது இடத்திலும், கேதர் ஜாதவ் 6வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர். ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியாவும், ஜடேஜாவும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. 11வது வீரராக வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இடம்பெற்றுள்ளார். கூடுதல் சுழற்பந்துவீச்சாளராக சாஹலும், கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமியும், தேர்வாகியுள்ளனர். கூடுதல் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கும், கூடுதல் தொடக்க வீரராக கே.எல். ராகுலுக்கும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. ரிஷப் பண்ட்டுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்