விளையாட்டு

இந்தியா ஓபன் - பி.வி. சிந்து போராடி தோல்வி

தந்தி டிவி

இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் களமிறங்கிய பி.வி. சிந்து, அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று அசத்தினார். காலிறுதியில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தோனிஷியாவின் கிரிகோரியாவை எதிர்கொண்ட சிந்து, முதல் செட்டை 9க்கு 21 என்ற கணக்கில் இழந்தாலும், இரண்டாவது செட்டை 21க்கு 19 என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார். எனினும், இறுதி செட்டை 17க்கு 21 என நழுவவிட்டதால் தோல்வியுடன் வெளியேறினார்.

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்