விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி : இந்தியா முன்னிலை

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புஜாராவின் அபார சதத்தால் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

தந்தி டிவி

நாட்டிங்காமில் நடைபெறும் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்தது. விக்கெட் இழப்பின்றி 19 ரன்களுடன் இந்திய அணி 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இங்கிலாந்து வீரர்களின் துல்லியமான பந்து வீச்சால் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, புஜாரா மட்டும் பொறுப்புடன் விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் எடுத்தார். இதனால், இந்திய அணி 273 ரன்கள் எடுத்தது. இது இங்கிலாந்து அணியின் ஸ்கோரை விட 27 ரன்கள் கூடுதலாகும். 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்களுள் எடுத்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்தார்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்