விளையாட்டு

நியூசி.யை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் - இந்திய அணி கேப்டன் விராட் கோலி

நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். நேப்பியரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நியூசிலாந்து மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால், 300 ரன்களுக்கு மேல் இலக்கை துரத்த வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இமாலய இலக்கை எட்டும் போது பதற்றமடைய கூடாது என்று குறிப்பிட்ட கோலி, தாம் வியந்து பார்க்க கூடிய வீரர் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் தான் என்று பாராட்டு தெரிவித்தார். ஐ.சி.சி.யின் மூன்று விருதுகள் கிடைத்தது மகிழ்ச்சி என்றும், மேலும் சிறப்பாக செயல்பட விருதுகள் ஊக்கம் அளிக்கும் எனறும் கோலி தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்