விளையாட்டு

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் : 3-ஆவது ஆட்டம் டிராவில் முடிந்தது

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் நடந்த 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்து உள்ளது.

தந்தி டிவி
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இந்நிலையில், சிட்னியில் நடந்த 3-ஆவது போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா, 338 ரன்களும், இந்தியா 244 ரன்களும் எடுத்தன. 2-ஆவது இன்னிங்சில் 312 ரன்களுக்கு ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து, 407 ரன்கள் இலக்குடன் 2-ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, இறுதி நாள் ஆட்ட நேர முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து, 334 ரன்கள் எடுத்ததால், போட்டி டிராவில் முடிந்தது. அதிரடியாக விளையாடிய பண்ட் 97 ரன்களும், புஜாரா 77 ரன்களும் எடுத்தனர். இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி, பிரிஸ்பேனில் வருகிற 15-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்