விளையாட்டு

இந்தியா vs ஆஸி. 2 வது ஒருநாள் போட்டி : பதிலடி கொடுக்குமா இந்தியா?

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஷான் மார்ஷின் அபார ச‌த‌த்தால் ஆஸ்திரேலிய அணி 298 ரன்கள் குவித்துள்ளது.

தந்தி டிவி

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஷான் மார்ஷின் அபார ச‌த‌த்தால் ஆஸ்திரேலிய அணி 298 ரன்கள் குவித்துள்ளது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அதன்படி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில், சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை சரிந்து வந்தன. ஆனால் ஒருபுறம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷான் மார்ஷ் 131 ரன்கள் குவித்து அந்த அணிக்கு வலு சேர்த்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 298 ரன்கள் குவித்துள்ளது.

தொடர்ந்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இந்திய அணி தனது பேட்டங்கை தொடங்கவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. எனவே இந்த போட்டியில் ஜெயித்தால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்பதால், இந்திய அணி வீர‌ர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே சமயம் டெஸ்ட் போட்டியில் உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றிய விரக்தியில் உள்ள ஆஸ்திரேலிய அணியும் ஒருநாள் தொடரை கைப்பற்ற போராடி வருவதால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்