ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பந்துவீச்சாளர்கள்
டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முன் குறைந்தது 2 மாதங்கள்
பயிற்சி எடுக்க வேண்டும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. போதிய
பயிற்சி இல்லாத நிலையில் உடனடியாக டெஸ்ட் போட்டிகளில்
பந்துவீச்சாளர்கள் களமிறங்கினால் அவர்களுக்கு காயம்
ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது எனவும் ஐ.சி.சி. வெளியிட்டுள்ள
அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.