விளையாட்டு

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி - எந்த வீரர்கள் இடம்பெற வாய்ப்பு?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வரும் 15ஆம் தேதி தேர்வு செய்யப்படும் நிலையில், எந்த வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

தந்தி டிவி

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி மும்பையில் வரும் திங்கட்கிழமை தேர்வு செய்யப்பட உள்ளது. இதில் கோலி தலைமையில் 15 வீரர்கள் களமிறங்க உள்ளனர். தொடக்க வீரராக ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் இடம்பெற உள்ளனர். மூன்றாவது வீரராக விராட் கோலி களமிறங்குவார். 4வது இடத்தில் யார் இருப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் ராயுடுவே 4வது வீரராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. பேட்டிங் வரிசையின் 5வது நிலையில் தோனியும், 6வது நிலையில் கேதர் ஜாதவும் இடம்பெறுவார்கள். 7வது நிலையில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெற வாய்ப்புள்ளது. 8வது நிலையில் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும், 9வது நிலையில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. 10வது நிலையில் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவும், 11வது இடத்தில் புவனேஸ்வர் குமாரும் இடம்பெறலாம். மீதமுள்ள 4 இடத்திற்கு கூடுதல் சூழற்பந்துவீச்சாளர் சாஹலும், கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமியும்,கூடுதல் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டும், இடம்பெறலாம். 15வது இடத்திற்கு தமிழக வீரர் விஜய் சங்கருக்கும், கே.எல். ராகுலுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்