தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குறைந்த இலக்கான 124 ரன்கள் சேசிங் செய்ய முடியாமல் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு பிட்ச்தான் காரணம் என சிலர் விமர்சித்த நிலையில், அவற்றிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் எவ்வளவு பெரிய அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டுமென்றும், அழுத்தத்தை எதிர்கொள்ள இந்திய அணி தவறியதாகவும் அவர் சாடினார்.