விளையாட்டு

இணையத்தில் பரவும் கம்பாளா வீரரின் ஓட்டம் - கம்பாளா வீரருக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி

கர்நாடகா மாநிலம் மங்களூர் கம்பாளா பந்தயத்தில் 142 மீட்டர் தூரத்தை 13 புள்ளி 62 வினாடிகளில் கடந்த வீரருக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
100 மீட்டர் தூரத்தை ஜமைக்காவை சேர்ந்த நட்சத்திர வீரர் 9.58 விநாடிகளில் கடந்ததே உலக சாதனையாக உள்ள நிலையில் , அதனை கம்பாளா வீரர் ஸ்ரீனிவாசா கவுடா 9.55 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்த வீரரை மத்திய விளையாட்டு அமைச்சகம் தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவர் திங்களன்று இந்திய விளையாட்டு ஆணையம் வந்தடைவார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு தலைசிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு போட்டிகளில் கலந்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்