2020 ஆம் ஆண்டுக்கான இந்திய வீரர்களின் ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏ பிளஸ் பிரிவில் இடம் பெற்றுள்ள கேப்டன் கோலி, ரோகித் சர்மா, பும்ராவுக்கு 7 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. அஷ்வின், ஜடேஜா, புஜாரா, ரகானே ஆகியோர் ஏ பிரிவில் தொடர்ந்து நீடிக்கின்றனர். நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத காரணத்தால் தோனியின் பெயர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.