விளையாட்டு

கண்ணீருடன் ஓய்வுபெற்ற உருகுவே கால்பந்து வீரர் லூயிஸ் சுவாரெஸ்

தந்தி டிவி

பிரபல உருகுவே கால்பந்து வீரரான லூயிஸ் சுவாரெஸ், தனது கடைசி போட்டியில் விளையாடிய நிலையில், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். உருகுவேயில் நடைபெற்ற பராகுவேக்கு எதிரான, உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியுடன் அவர் ஓய்வுபெற்றார். போட்டி முடிந்த பின்பு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பியும், சக வீரர்கள் கட்டியணைத்தும் பிரியாவிடை அளித்தனர். போட்டிக்கு பின் குடும்பத்தினருடன் மைதானத்தில் நின்ற லூயிஸ் சுவாரெஸ், அங்கு ஒளிபரப்பப்பட்ட வீடியோவை கண்டு கண்கலங்கினார். 37 வயதான சுவாரெஸ், 143 போட்டிகள் விளையாடி 69 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது