விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது.

தந்தி டிவி

உலக அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டான கால்பந்து போட்டியின் உலக கோப்பை போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அதன்படி, 2018ம் ஆண்டின் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க விழாவில் பிரபல இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி மற்றும் ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதையடுத்து, ஜூலை 15ம் தேதி வரை கால்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் நாள் ஆட்டத்தில் ரஷ்யா மற்றும் சவுதி அரேபிய அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. ரஷ்யாவின் 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் மொத்தம் 64 போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகளை காண்பதற்காக உலகம் முழுவதும் இருந்து ஒரு கோடி ரசிகர்கள் திரள்வதால் மாஸ்கோ நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..