விளையாட்டு

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் - தொடர்ந்து 18 வெற்றிகளை பெற்று லிவர்பூல் அணி அசத்தல்

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் லிவர்பூல் அணி தொடர்ச்சியாக 18 வெற்றிகளை பதிவு செய்து அசத்தியுள்ளது.

தந்தி டிவி

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், லிவர்பூல் அணி தொடர்ச்சியாக 18 வெற்றிகளை பதிவு செய்து அசத்தியுள்ளது. அன்பீல்டில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லிவர்பூல் - வெஸ்ட் ஹாம் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணி 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாம் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 2017 ஆம் ஆண்டில் மான்செஸ்டர் சிட்டி செய்த சாதனையை லிவர்பூல் சமன் செய்துள்ளது. வாட்போர்ட் அணிக்கு எதிரான போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெறும் பட்சத்தில், பிரீமியர் லீக் தொடரில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த சாதனையை லிவர்பூல் அணி படைக்கவுள்ளது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்