விளையாட்டு

3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து அணி 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தந்தி டிவி

இங்கிலாந்து அணி 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மான்செஸ்டரில் நடந்த இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 369 ரன்னும், வெஸ்ட்இண்டீஸ் அணி 197 ரன்னும் எடுத்தன. 172 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீஸிற்கு 399 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் போட்டியின் 5வது நாளில் வெஸ்ட் இண்டீஸ் 129 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் நாயகன் விருதை ஸ்டூவர்ட் பிராடு தட்டிச் சென்றார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு