விளையாட்டு

"தோனி இருக்க, நான் முதலுதவி பெட்டி தான்" - தினேஷ் கார்த்திக்

உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தாலும், அணியில் தோனி இருக்க தாம் ஒரு முதலுதவி பெட்டி போல தான் இருப்பேன் என்று தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

தந்தி டிவி
உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தாலும், அணியில் தோனி இருக்க தாம் ஒரு முதலுதவி பெட்டி போல தான் இருப்பேன் என்று தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். உலகக் கோப்பை அணியில் தேர்வானது குறித்து கருத்து தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பது எப்போதும் மகிழ்ச்சியான தருணம் என்றார். அணி நிர்வாகம் தம்மிடம் எதனை எதிர்பார்க்கிறதோ அதனை நிறைவேற்ற முயற்சி செய்வேன் என்று கூறிய கார்த்திக், தோனி அணியில் இருக்க, தாம் ஒரு முதலுதவி சிகிச்சை பெட்டி போல் தான் இருப்பேன் என்று கிண்டலாக கூறினார்.கடந்த 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்தார். ஆனால் தோனி அணியில் இருந்ததால் கார்த்திக்கிற்கு போட்டியில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்