விளையாட்டு

ஐ.பி.எல் ஃபேன்ஸ் பார்க்கில் கூடிய ரசிகர்கள் - போலீஸ் தடியடி

ஐ.பி.எல் ஃபேன்ஸ் பார்க்கில் ஏராளமான ரசிகர்கள் கூடியதால், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

தந்தி டிவி

புதுச்சேரி ஐ.பி.எல் ஃபேன்ஸ் பார்க்கில் ஏராளமான ரசிகர்கள் கூடியதால், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது. ஐ.பி.எல். நிர்வாகம் முக்கிய நகரங்களில் பேன்ஸ் பார்க்கை உருவாக்கி பெரிய திரையில் ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்புகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய ஆட்டம் திரையிடப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குடும்பத்துடன் மைதானத்திற்கு வந்து போட்டியை கண்டு களித்தனர். மைதானத்தின் கொள்ளளவை விட கூடுதலாக ரசிகர்கள் கூட்டம் வந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.இதனையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்