விளையாட்டு

தேசிய சதுரங்க போட்டி : நான்கு முறை பதக்கம் வென்று சாதனை

தேசிய சதுரங்க போட்டியில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பங்கேற்ற 4 முறையும் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த செருவங்கி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் - சத்திய பூங்குழலி தம்பதியரின் மகள் செந்தமிழ் யாழினி. இவர், தேசிய சதுரங்க போட்டியில், 4 முறை பங்கேற்று, பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட செந்தமிழ் யாழினி, 2 முறை தங்கப் பதக்கமும், 2 முறை வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

விளையாட்டு என்பது ஒழுக்கம், நேர்மையை கற்றுத் தருவதோடு, வெற்றி - தோல்வியை வேறுபடுத்தி பார்க்காத மன நிலையை ஏற்படுத்தும் என்பதால், தமது பிள்ளைகளை விளையாட்டில் ஈடுபடுத்தியதாக, செந்தமிழ் யாழினியின் தந்தை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்