விளையாட்டு

சென்னை மண்ணில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முடிவுரை எழுதிய தோனி - தமிழக ரசிகர்கள் அதிர்ச்சி

தோனியின் ஓய்வு குறித்த விவாதம் கடந்த ஓராண்டாக நடந்துவரும் நிலையில், தனது ஓய்வு அறிவிப்பை சென்னை மண்ணில் அறிவித்தது தமிழக ரசிகர்கள் இடையே அதிர்ச்சியைும், நெகிழ்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தந்தி டிவி

தோனிக்கு இந்திய அணியுடன் எவ்வளவு தொடர்பும் நெருக்கமும் இருக்கிறதோ, அதற்கு சற்றும் குறைந்திடாத அளவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனும், தமிழ்நாட்டு ரசிகர்களுடனும் தொடர்பு உள்ளது. தோனி பிறந்தது வேண்டுமானால் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியாக இருக்கலாம். ஆனால் சொந்த மண்ணைவிட அதிகமான அன்பை வாரி வழங்கியது சென்னை தான். இதை உணர்ந்த தோனி சென்னை தனது இரண்டாவது தாய்வீடு என்பதை பலமுறை தெரிவித்திருக்கிறார்.

தோனிக்கு என தமிழகத்தில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவரை தல என்றே செல்லமாக அழைப்பாளர்கள். சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே. போட்டி நடைபெறும் போது தோனியின் ஆட்டத்தை பார்ப்பதற்காக மட்டுமே ஒரு கூட்டம் இருக்கும். அந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர்.சென்னையில் ஐ.பி.எல் போட்டிக்காக வரும் தோனி மெரினா கடற்கரையிலும் , திரையரங்கிலும் தனது நேரத்தை செலவிட்டு இருக்கிறார். சென்னையின் பிரியாணி கொஞ்சம் காரமாக இருந்தாலும், எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்கு கிடைக்கும் பில்டர் காபியும் எனக்கு பிடிக்கும் என தெரிவித்து இருக்கிறார் தோனி..சென்னையில் பைக்கில் சுற்றி இருக்கிறார். ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி இல்லாத இரண்டு வருடம் தான் பட்ட வேதனைகளை அவர் உருக்கமாக பேசி இருக்கிறார். ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி மீண்டு வந்தபோது, அதற்கான அறிமுக மேடையிலேயே கண்ணீர் விட்டவர் தோனி.

தோனி தனது நூறாவது அரை சதத்தை 2017ம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தான்..ஐ.பி.எல். அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணியை பிளே ஆஃபிற்கு சுற்றிற்கு தகுதிபெற வைத்த கேப்டன் தோனி , 8 முறை பைனலுக்கு முன்னேற வைத்து, 3 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.சென்னை மீது அதீத காதல் கொண்டுள்ள தோனி கடந்த ஓராண்டாக அவரது ஓய்வு குறித்த எழுந்த சர்ச்சைக்கு சென்னை மண்ணிலேயே முடிவுரை எழுதி இருப்பது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஒருபுறமும் அதிர்ச்சியையும், மறுபுறம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்