இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங் மீது, 144 தடை உத்தரவை மீறியதாக சென்னை சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால், கடந்த சனிக்கிழமை தளர்த்தப்பட்ட ஊரடங்கு அமலில் இருந்த கடந்த சனிக் கிழமை, திருவான்மியூர் பகுதிக்கு தனது சொகுசுக் காரில் சென்ற ராபின்சிங்கை தடுத்த போலீசார், காரை பறிமுதல் செய்து, ஐநூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. முகக் கவசம் அணிந்திருந்ததால், கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கை போலீசார் அடையாளம் காணமுடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.