விளையாட்டு

ஆசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி - தமிழக வீர்ர்கள் சாதனை

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் சீர்காழியை சேர்ந்த மாற்று திறனாளி வீரர் விமல் 4 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

தந்தி டிவி

முதலாவது ஆசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றன. இதில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளை சேர்ந்த 300 வீர்ர்கள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து 180 சிலம்பாட்ட வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். தனிநபர் பிரிவில் சீர்காழியை சேர்ந்த மாற்று திறனாளி வீரர் விமல் 4 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். சென்னை செவன் டு செவன் சிலம்பாட்ட கழகம் முதலிடத்தையும், சீர்காழியை சேர்ந்த வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு