விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் நடந்த சுவராஸ்யம்

தந்தி டிவி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் பங்கேற்றுள்ள 6 அணிகளின் கேப்டன்களுடன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்.

தமிழ்ப் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து இந்தியா, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட 6 அணிகளின் கேப்டன்களும் கலந்துரையாடலில் பங்கேற்றனர். அப்போது, கேப்டன்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான ஏற்பாடு, தமிழ்நாட்டின் உணவு - கலாசாரம் - விருந்தோம்பல் உள்ளிட்டவை குறித்து ஒவ்வொரு அணியின் கேப்டனும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக உதயநிதி ஸ்டாலினும் கேப்டன்களும் வேட்டி, சட்டை அணிந்து கோப்பையுடன் குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்