விளையாட்டு

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்/அரையிறுதிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா

தந்தி டிவி

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி ஈக்வடார் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லிசான்ட்ரோ மார்ட்டினெஸ் கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஈக்வடார் வீரர்கள் கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தனர். இதற்குப் பலனாக ஆட்டத்தின் 91வது நிமிடத்தில் ஈக்வடார் வீரர் கெவின் ரோட்ரிக்ஸ் பதில் கோல் போட்டார். இதனால் ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் போட்டி சமன் ஆன நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் பின்பற்றப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட்டில் 4க்கு 2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்