நியூயார்கில் நடைபெற்று வரும் இந்த தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் டாமினிக் தீம் - ரஷ்ய வீரரான டானில் மெட்வெதேவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய டாமினிக் தீம் 6க்கு 2, 7க்கு 6 , 7க்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதில் 12 ஏஸ் சர்வீஸ்கள் அடங்கும்.. இறுதி போட்டியில் தீம் , ஜெர்மன் வீரர் அலெக்ஸாண்டரை எதிர்கொள்கிறார்.