2006க்கு பிறகு ஆசியக்கோப்பைக்கு தகுதி - ஜூனியர் மகளிர் கால்பந்து அணி சாதனை
கடந்த இரு தசாப்தங்களில் முதன்முறையாக இந்திய மகளிர் ஜூனியர் கால்பந்து அணி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
மியான்மரின் யாங்கோன் நகரில் நடைபெற்ற ஆசிய கோப்பை தகுதி சுற்று தொடரின் குரூப்-டி GROUP D போட்டியில் இந்திய மகளிர் ஜூனியர் அணி, மியான்மரை எதிர்கொண்டது.
இதில் 27வது நிமிடத்தில் இந்தியாவின் பூஜா அபாரமாக கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார்.
இரண்டாவது பாதியில் மியான்மர் எவ்வளவு போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் ஒன்றுக்கு பூஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் ஜூனியர் அணி, 2006ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.