போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாணவர்களை ஒடுக்குவதால், இந்தியாவை உயர்த்த முடியாது, அவர்களை இந்தியாவிற்கு எதிராகத்தான் மாற்றுகிறீர்கள் என்று மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளார்.