விளையாட்டு

2021 டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறும் - கங்குலி

சர்வதேச டி20 உலகக் கோப்பை அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்

தந்தி டிவி

நடப்பு ஆண்டில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை தொடர் கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் எந்த நாட்டில் அந்தத் தொடர் நடத்தப்படும் என ஐசிசி அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து இந்தியாவில் டி20 உலகக் கோப்பையை நடத்த திட்டமிட்டுள்ளன. அடுத்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தத் தொடர் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து என மொத்தம் 16 சர்வதேச அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இது மிகவும் பெருமையான ஒன்று என சவுரங் கங்குலி தெரிவித்துள்ளார். அத்துடன் கிரிக்கெட்டை விரும்பும் நமது நாட்டில் விளையாடுவதால் உலக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்