அரசியல்

யெஸ் வங்கி மறுகட்டமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் யெஸ் வங்கியின் மறுகட்டமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தந்தி டிவி

நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் யெஸ் வங்கியின் மறுகட்டமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், யெஸ் வங்கியின் 49 சதவீத ஈக்விட்டி பங்குகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாங்குகிறது என்றும், மற்ற முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், உடனடி முதலீட்டு தேவைகளை சமாளிக்க ஆயிரத்து 100 கோடி ரூபாயாக இருந்த அதிகாரப்பூர்வ மூலதனம், 6 ஆயிரத்து 200 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யெஸ் வங்கியின் மறுகட்டமைப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட 3 தினங்களில், வங்கி மீதான கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படும் என்றும், 7 தினங்களில் எஸ்பிஐ வங்கியின் இயக்குனர்கள் தலைமையிலான புதிய நிர்வாக குழு, வங்கியின் நிர்வாகத்தை கையில் எடுக்கும் என அவர் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்