அரசியல்

Senthilbalaji Case| இன்று தடை உடையுமா? - தயாராக காத்திருக்கும் தமிழக அரசு

இன்று தடை உடையுமா? - தயாராக காத்திருக்கும் தமிழக அரசு

thanthitv

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது... டாஸ்மாக்கில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே முன்ஜாமின் வழங்கியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ் என்பவர், டாஸ்மாக் முறைகேடு வழக்கை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விடுத்த கோரிக்கையை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூரிய காந்த், நீதிபதிகள் ஜோய்மாலியா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Vetri Payanam அமலாகிறது `வெற்றி பயண திட்டம்’ - சற்றும் எதிர்பாரா நேரத்தில் CM சர்ப்ரைஸ் அறிவிப்பு

Free Cylinder | CM Vijay | சிலிண்டர்கள் இலவசம்.. CM விஜய் அதிரடி அறிவிப்பு

TN Assemly | CM Vijay | நிசப்தமான பேரவை - ஒருகணம் எல்லோர் முகத்திலும் தெரிந்த துக்கம்

Megamalai Issue மேகமலை மக்களை வெளியேற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் - உள்ளே வந்த டீம்

DMK vs TVK | எதிர்க்கட்சிகள் போட்டுள்ள திட்டம்