அரசியல்

ஆண்டுகளுக்கு பின் துளிர் விட்ட ரஜினி அரசியல் - ரசிகர்களுக்கு அதிசயம் நிகழ்த்துவாரா ரஜினி?

ரஜினிகாந்த்தின் பிறந்த தினமான இன்று திரைப்படங்களில் அவர் அரசியல் பேசியது பற்றிய ஒரு தொகுப்பை பார்க்கலாம்

தந்தி டிவி

தமிழக அரசியலில் ரஜினிகாந்த் அடியெடுத்து வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு, நீண்ட காலமாகவே நீடித்து வருகிறது. அவரது அரசியல் அறிவிப்புகள், 'மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு' நல்ல தீனியாக இருப்பது ஒரு புறம் இருக்க... 1980களில் இருந்தே ரஜினி அரசியல் பேசி வருகிறார் என்பது ஆச்சர்ய தகவல்...

நடிகர் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் பாக்யராஜூடன் இணைந்து நடித்து 1985ம் ஆண்டு வெளியான நான் சிகப்பு மனிதன் படத்தின் பாடல் தான் இது...

இதில் இருந்து சரியாக 3 ஆண்டுகள் கழித்து வெளியான குருசிஷ்யன் படமும் ரஜினியின் அரசியலுக்கு தப்பவில்லை. இந்த படத்தில் மறைந்த அரசியல் விமர்சகர் சோவும் ரஜனியுடன் இணைந்து கொண்டார்

1986ம் ஆண்டு வெளியான மாவீரன், 1993ம் ஆண்டு வெளியான தனது சொந்த தயாரிப்பான வள்ளி ஆகிய படங்களிலும் அரசியல் வசனங்களை பேசி இருக்கிறார் ரஜினி.

பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில் தான் ரஜினி மீது நேரடியான அரசியல் முத்திரை விழுந்தது. ஏற்கனவே பம்பாய் படத்துக்காக இயக்குநர் மணிரத்னத்தின் வீடு மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி விட்டதாக குற்றஞ்சாட்டினார், ரஜினி. அன்றைய அதிமுக அரசு தொடர்ந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என ரஜினி கூறியதுதான், அன்றைய 'ஹைலைட் அரசியல் பஞ்ச்'

ஜெயலலிதாவை நேரடியாக எதிர்த்தால், முத்து, அண்ணாமலை போன்ற படங்களில் அவர் பேசிய வசனங்களை எல்லாம் ஜெயலலிதாவுடன் பொருத்தி பார்த்து மகிழ்ந்தனர், ரசிகர்கள்..

இப்படியாக மெள்ள மெள்ள அரசியல் பக்கம் திரும்பிய ரஜினி காந்த், 1996ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது வெளிப்படையாகவே, திமுக, தமாகா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அவரது ரசிகர் மன்றத்தினரும் தேர்தல் பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டனர்.

அந்த தேர்தலின்போது, நேரடியாக அரசியலில் குதித்தவர்கள் தான் நெப்போலியனும், சரத்குமாரும். அந்த தேர்தலுக்கு பிறகு, பாபா பட வெளியீட்டின்போது, பாமக உடனும் ரஜினிக்கு மோதல் ஏற்பட்டது. பாமகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என 1998, 1999 நாடாளுமன்ற தேர்தல்களின்போது வெளிப்படையாகவே ரஜினி அறிவித்தார்.

2000ம் ஆண்டுக்கு பிறகு ரஜினியின் அரசியல் ஆர்வம் மங்கியது. ஆனால், அவ்வப்போது, அவர் பேசும் வசனங்களில் அரசியல் இருப்பதாக ரசிகர்களை அர்த்தம் கற்பித்துக் கொண்டு மகிழ்ந்தாலும், கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ரஜினியின் அரசியல் ஆர்வம் துளிர் விட்டுள்ளது. அவர் அரசியலில் நுழையும் அதிசயம் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு