Vellore | Duraimurugan | DMK | TN Election 2026 | "முதன் முதலாக தேர்தலில் நின்ற போது.." | பிரச்சாரத்தில் துரைமுருகன் நெகிழ்ச்சி #duraimurugan #DMK #Vellore #tnelection2026 #thanthitv வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டு துரைமுருகன் வாக்குசேகரிப்பு காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் களம் காணும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், விண்ணம்பள்ளி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தனது அரசியல் வாழ்வின் தொடக்கக் கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட அவர், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் செய்துள்ள வளர்ச்சித் திட்டங்களை பட்டியலிட்டு ஆதரவு திரட்டினார். தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய துரைமுருகன், "1971-ஆம் ஆண்டு தான் முதன்முதலாகத் தேர்தலில் நின்றபோது, தனக்கு பெரும் ஆதரவு கொடுத்தது விண்ணம்பள்ளி மக்கள் தான்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் விண்ணம்பள்ளி ஊராட்சிக்கு மட்டும் சுமார் 5.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 63 திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சின்ன ராமநாதபுரத்தில் புதிய ரேஷன் கடை உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். விண்ணம்பள்ளி மக்களின் தேவைகளை உணர்ந்து பல்வேறு கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலைத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மீண்டும் சேவையாற்ற தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.