Anbumani | இடஒதுக்கீடு உச்சவரம்பை தகர்ப்போம் - அன்புமணி உறுதி #anbumani #pmk #tnpolitics #thanthitv முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாளையொட்டி, அவருக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், மண்டல் ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியவர் வி.பி.சிங் எனப் பாராட்டியுள்ளார். மேலும், இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பைத் தகர்த்து, மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க உறுதியேற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.