அரசியல்

Dharapuram | பள்ளிவாசலில் வாக்கு சேகரிப்பு.. அதிமுக சத்தியபாமா தாராபுரத்தில் தீவிர பிரசாரம்

பள்ளிவாசலில் வாக்கு சேகரிப்பு.. அதிமுக சத்தியபாமா தாராபுரத்தில் தீவிர பிரசாரம்

thanthitv

Dharapuram | பள்ளிவாசலில் வாக்கு சேகரிப்பு.. அதிமுக சத்தியபாமா தாராபுரத்தில் தீவிர பிரசாரம் #Dharapuram #Thiruppur #AIADMK #TNPolitics திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியபாமா, சுல்தானியா பள்ளிவாசலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜவுளிக்கடை வீதியில் உள்ள சுல்தானியா பள்ளிவாசலில், வெள்ளிக்கிழமை என்பதால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அங்கு சென்ற தாராபுரம் தொகுதியின் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா, தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். அவருடன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் பிரசாரத்தில் பங்கேற்றனர். தன்னை வெற்றி பெறச் செய்தால், இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என சத்தியபாமா வாக்குறுதி அளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்