அரசியல்

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

சொத்து வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியை சேர்ந்த தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, வருமானத்துக்கு அதிகமாக 16 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது.இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், மாரிமுத்து, அவரது மனைவி துளசியம்மாள் மற்றும் மகன் பிரகாஷ் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், பத்தாயிரம் ருபாய் அபராதமும் விதித்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து, 3 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர் நதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், மாவட்ட நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். தலா 5 லட்சம் ரூபாய் பிணைத்தொகை மாவட்ட நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் 3 பேருக்கும் ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்