வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு வாக்கு சேகரித்த வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் #chennai #dmk #villivakkam #tnelection2026 #nomination #campaign #thanthitv சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கார்த்திக் மோகன், தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான பி.கே. சேகர்பாபு முன்னிலையில், சிட்கோ நகரில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் கார்த்திக் மோகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்... வேட்புமனுத் தாக்கலின் போது கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில், கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்து கார்த்திக் மோகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வில்லிவாக்கம் தொகுதியில்75 சதவீத வாக்குகளை திமுக பெறும் என அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை தெரிவித்தார்...