அரசியல்

வேல்முருகன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் மதுக்கடை சூறை

டியூப் லைட் மற்றும் தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 7 பேர், மது பாட்டில்களை அடித்து உடைத்து, சாலைகளில் வீசியெறிந்து விட்டு, ஓடி விட்டனர்

தந்தி டிவி

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் தொண்டர்கள், கடலூர் அருகே நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக் மதுப்பான கடையை சூறையாடினர். டியூப் லைட் மற்றும் தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 7 பேர், மது பாட்டில்களை அடித்து உடைத்து, சாலைகளில் வீசியெறிந்து விட்டு, ஓடி விட்டனர்.

இந்த சம்பவத்தில், புண்ணியமூர்த்தி, திருஞானம் ஆகிய இருவருக்கு காயம் ஏற்பட்டது. பாட்டில் வீசியதில், சி. என். பாளையத்தை சேர்ந்த ஜெகத்ரட்சகன் என்பவரும் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தப்பி ஓடியவர்களில், 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், தலைமறைவாக உள்ள எஞ்சிய 4 பேரை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டு உள்ளதாகவும் கடலூர் போலீசார் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்